நாளை முதல் கோவை, திருப்பூரில் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம்... நூல் விலை உயர்வு எதிரொலி!
நூல் விலை உயர்வை எதிர்த்து கோவை மற்றும் திருப்பூரில் நாளை முதல் 50 சதவீத ஜவுளி உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட உள்ளது. திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் இதை அறிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களாக நூல் விலை கிலோவுக்கு சுமார் 30 ரூபாய் உயர்ந்து, 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நூல் விலை உயர்வால் தயாரிக்கப்பட்ட துணிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விசைத்தறி தொழிலில் பாவு நூலை வழங்கி துணி தயாரிக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். நூல் விலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
