சைபீரியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
Feb 15, 2025, 16:25 IST
ரஷியாவின் தெற்கு சைபீரியாவில் அல்டார் குடியரசு பகுதியில், இன்று காலை 8.48 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருப்பதாக ரஷிய புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாகவும், அதனால் பொது நிகழ்ச்சிகள் உட்பட சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, சேதங்களை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
