சட்ட விரோத படங்கள் பதிவிட்டால் கடும் கண்டனம்... எக்ஸ் தளம் எச்சரிக்கை!

 
எக்ஸ்

எலான் மஸ்கின் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனம் உருவாக்கிய கிரோக் ஏ.ஐ., எக்ஸ் சமூக வலைதளத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை சில பயனர்கள் தவறாக பயன்படுத்தி, பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை சட்டவிரோதமாக ஆபாசமாக மாற்றி பதிவிட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பதிவுகள் எக்ஸ் தளத்தில் வைரலாக பரவின.

இந்த விவகாரம் குறித்து சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். எக்ஸ் தளத்தின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்த அவர், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து எக்ஸ் தளம் நடவடிக்கைக்கு முன்வந்தது.

கிரோக் ஏ.ஐ.யை பயன்படுத்தி ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கிய கணக்குகளை உடனடியாக நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத பதிவுகள் செய்த கணக்குகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என எக்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!