வலுக்கும் எதிர்ப்புகள்... வராத கல்விக்கான நிதி... நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

 
சட்டசபை அமைச்சரவை

கல்விக்கான மத்திய அரசின் நிதியுதவி, மும்மொழி கல்விக் கொள்கையைக் காரணம் காட்டி இழுத்தடிப்படும் சூழலில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் தலைமையில் கூடுகிறது. 

தமிழகத்தின் 2025-26ம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள்  மார்ச் 14 மற்றும் 15ம் தேதிகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வெளியிட்டார். இதையடுத்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு துறைகளின் வல்லுநர்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், வணிக அமைப்புகளிடம் கடந்த 2 நாட்களாக கருத்துகளை கேட்டு வருகிறார். 

அமைச்சரவை கூட்டம்

இதேபோல், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விவசாயிகள், விவசாய சங்கங்களிடம் கருத்துகளை விரைவில் கேட்டறிந்து உள்ளார்.  முன்னதாக, வேளாண் துறை அதிகாரிகளிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை பிப்ரவரி 25ம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் துறை சார்ந்த திட்டங்களுக்கும், தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் புதிய அறிவிப்புகளுக்கும் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது.

தமிழக அமைச்சரவை

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பெண்கள், மாணவர்கள் தொடர்பான திட்டங்களை தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும், கூடுதல் பயனாளிகளை சேர்ப்பதற்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்படும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, மும்மொழிக் கொள்கை பிரச்சினை, தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது மற்றும் அரசு ஊழியர்கள் பிரச்சினை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web