பலத்த காற்று… விவேகானந்தர் மண்டபம் படகு சேவை நிறுத்தம்!
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின், விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி திருவள்ளுவர் சிலையைப் பார்ப்பது அவர்களின் முக்கியமான அனுபவமாகும். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் காலை முதல் மாலை வரை இடைவேளையின்றி படகு சேவையை இயக்கி வந்தது.

இந்த நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. கடல் சீற்றம் அதிகரித்ததால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. கடல் நிலை சீராகும் வரை இந்த சேவை மீண்டும் தொடங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை சீசன் காரணமாக கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர். படகு சேவை நிறுத்தப்பட்டதால், விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க முடியாமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். வானிலை சீரானதும் படகு சேவை மீண்டும் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
