காதலை கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால் மாணவி தற்கொலை - நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்!

 
காதல் காதலி

சிவகாசி மாவட்டத்தில், கல்லுரி மாணவியின் காதல் விவகாரத்தில் கல்லூரி நிர்வாகத்தின் அணுகுமுறை மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி, இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் சக மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.

சிவகாசி ஆசாரி காலனியைச் சேர்ந்த முருகேஸ்வரி என்பவரின் மகள் சோலை ராணி (19). இவர் சிவகாசி - திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் பயிலும் ஒரு மாணவரை சோலை ராணி காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கல்லூரி நிர்வாகத்திற்குத் தெரியவந்த நிலையில், அவர்கள் மாணவியைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

காதல்

கல்லூரி நிர்வாகம் மற்றும் குடும்பத்தினர் கண்டித்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சோலை ராணி, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்திற்குப் பிறகு, இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் கல்லூரி வாயிலில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்கொலை

மாணவியின் தற்கொலைக்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்தின் மீது உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதியுடன் கூடிய நிதி இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கல்லூரிகளில் மாணவ, மாணவியரின் மனநலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்: .

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!