முதல் நாளிலேயே சோகம்... +2 பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவி அரசுப் பேருந்து மோதி உயிரிழப்பு!

 
12

தமிழகம் முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், முதல் தேர்வு நாளிலேயே, தேர்வெழுத சென்ற மாணவி அரசு பேருந்து  மோதி உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் 3,412 மையங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இன்று முதல் நாளில் தமிழ் மற்றும் பிற மொழித் தேர்வுகள் நடைபெற்றன.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் இன்று காலை மதுரை மாவட்டம் அல்லிக்குளம் தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் தேர்வு மையத்துக்கு சென்றுக் கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவி துர்கா தேவி, இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்துக் கொண்டிருந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

12

இந்த விபத்து குறித்து தகவலறிந்து, சம்பவ  இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!