பள்ளி வளாகத்தில் மான் சிலை விழுந்து மாணவி பலி!

 
இந்தியா

ஆந்திர மாநிலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தில் ஜி பெத்தபூடி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இருந்த சிமெண்டால் செய்யப்பட்ட மான் சிலை திடீரென சரிந்து விழுந்தது. அந்த சிலை திவி ஜாஹ்னவி என்ற 7 வயது இரண்டாம் வகுப்பு மாணவி மீது விழுந்து அமுக்கியது. இதில் மாணவி படுகாயமடைந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!