பள்ளிச் சுவர் விழுந்து பலியான மாணவர்... முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

 
சுவர்

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மனேரி கொண்டாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நிகழ்ந்த விபத்தில், பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்துக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.

சுவர்

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மனேரி கொண்டாபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மோஹித் (வயது 12) என்ற மாணவர் இன்று (16.12.2025) மதியம் 1.00 மணி அளவில் பள்ளியின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன்."

முதல்வர்

மேலும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர் அவர்கள், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!