செங்கல்பட்டு மாணவி மரணம்... சீரழிகிறதா பள்ளிக்கல்வித் துறை?! தமிழகத்தில் அதிகரிக்கும் மாணவிகள் கர்ப்பமடையும் போக்கு!

 
கர்ப்பம்

செங்கல்பட்டு பகுதியில் பள்ளி மாணவி ஒருவருக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவருக்குச் சமீபத்தில் கடும் காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மாணவியை சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

கர்ப்பமாக இருந்த நிலையில், அந்த மாணவிக்குத் தீவிரமான மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உடல்நிலை மேலும் மோசமடைந்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அந்த மாணவி பரிசோதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு (21) என்ற இளைஞர் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனடியாக அந்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கர்ப்பிணி

சமீபகாலமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவிகள் இது போன்ற பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளாவதும், அவர்கள் கர்ப்பமடைவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனைத் தடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் சில முக்கியக் கருத்துகளை முன்வைக்கின்றனர்:

பள்ளிகளில் முறையான பாலியல் கல்வி மற்றும் 'குட் டச், பேட் டச்' குறித்த விழிப்புணர்வை வழங்க வேண்டும். பதின்ம வயது பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தால், பெற்றோர்கள் கனிவோடு பேசி அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்துக் கொள்ள வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்குப் பிணையில் வர முடியாத அளவிற்குத் தண்டனைகளை விரைந்து பெற்றுத் தர வேண்டும்.

சிறுமி குழந்தைகள் பொம்மை பாலியல்

18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் எவ்விதத் தூண்டுதலுக்கு ஆளானாலும், அவர்களின் சம்மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பாலியல் ரீதியான அணுகுமுறை என்பது போக்ஸோ சட்டத்தின் கீழ் மிகப்பெரிய குற்றமாகும். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்தச் சம்பவம் ஒரு மாணவியின் உயிரைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே சிதைத்துள்ளது. இத்தகைய அவலங்களைத் தவிர்க்கச் சமூக விழிப்புணர்வு மிக அவசியமாகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!