அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்… 5 லட்சம் குழந்தைகளை சேர்க்க இலக்கு!

 
மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் 2026–2027 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 1ஆம் வகுப்பு சேர்க்கையை ஆரம்பித்து, புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு நலத்திட்டப் பொருட்களையும் வழங்கினார். தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 2024ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதத்திலேயே சேர்க்கை தொடங்கும் நடைமுறை அமலில் உள்ளது. பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டு வந்த சேர்க்கை, தற்போது முன்கூட்டியே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை சேர்க்க பதிவு செய்து வருகின்றனர்.

அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை முடித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் மட்டும் 5 லட்சம் குழந்தைகளை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முயற்சி மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!