பள்ளியில் மாணவர்களுக்குள் மோதல்.. இரும்புக் கம்பியால் தாக்கி மாணவன் கொலை!
கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், சக மாணவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இரும்புக் கம்பியை கொண்டு தாக்கியதால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஒரு மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கூட வளாகத்திலேயே இத்தகைய வன்முறை நடந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் 7 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து சமூகத்தில் கவலை அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
