அரசுப் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை... கீழிறங்கிய பின்னரும் பின்தொடர்ந்து சென்று கல்வீசி தாக்குதல்!

 
பேருந்தில் பாலியல் தொல்லை

கோவை மாவட்டம் வால்பாறை அருகே 12ம் வகுப்பு பயின்று வரும் 17 வயது மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

12-ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, தனது பள்ளி செயல்முறைப் பயிற்சிக்கான பொருட்களை வாங்குவதற்காக வால்பாறைக்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டிற்குச் செல்ல அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். அதே பேருந்தில் பயணித்த சோலையாறு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (22) என்ற வாலிபர், மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கல்லாறு பிரிவு பகுதியில் பேருந்தை விட்டு இறங்கியுள்ளார். அப்போது பின் தொடர்ந்து சென்ற அந்த வாலிபர், மாணவி மீது கல் வீசித் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மாணவி அலறவே, பொதுமக்கள் திரண்டதைக் கண்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காயமடைந்த மாணவி வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், வால்பாறை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் முதற்கட்ட விசாரணை நடத்தினார். பின்னர், வால்பாறை அனைத்து மகளிர் போலீசார் வழக்கை ஏற்று, தலைமறைவாக இருந்த சந்தோஷைக் கைது செய்தனர். சந்தோஷ் மீது கடுமையான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது

பட்டப்பகலில் அரசுப் பேருந்திலேயே மாணவிக்கு இத்தகைய கொடுமை இழைக்கப்பட்ட சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!