யூனிஃபார்ம் அளவெடுப்பதாக மாணவிக்கு பாலியல் தொல்லை.. தையல்கடைக்காரர் கைது!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சீருடைக்கு அளவெடுப்பதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை: தையல்கடைக்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் கடகம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுதீர் (44). அப்பகுதியில் தையல் கடை நடத்தி வரும் சுதீர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் தைத்து கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அந்த பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி ஒருவர் தனக்கு சீருடை தைக்க அளவு கொடுப்பதற்காக சுதீரின் கடைக்கு சென்றுள்ளார். அப்போது உனது ஆடைக்கு அளவு எடுக்க வேண்டும் எனக்கூறி கடையில் உள்ள தனி அறை ஒன்றினுள் மாணவியை சுதீர் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அளவெடுப்பதாக கூறி மாணவிக்கு சுதீர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பதறிய அந்த மாணவி கத்தியபடியே அறையில் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் உடனே திருவனந்தபுரம் பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுதீரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
