பிரசவம் ஆகி 10 நாள் தான் ... கைக்குழந்தையுடன் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

 
குழந்தை

மகாராஷ்டிரம் மாநிலம் நாந்தேட் நகரில் 10 நாள் கைக்குழந்தையுடன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி ஷீதல் சந்திரகாந்த் சித்தே பாராட்டைப் பெற்றுள்ளார். அரசியல் அறிவியல் தேர்வுக்காக குழந்தையுடன் தேர்வு மையத்துக்கு வந்த அவர், இரண்டு நாட்களுக்கு முன்பே பிரசவம் ஆன நிலையிலும் பிப்.10 அன்று ஆங்கிலத் தேர்வையும் எழுதியிருந்தார்.

குழந்தையுடன் தேர்வு

கல்வியின் மீதான அவரது உறுதியை மதித்து, தேர்வு அதிகாரிகள் அவருக்குத் தனி அறை ஒதுக்கினர். குழந்தைக்காக தொட்டிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தை தூங்கும் நேரத்தில் தேர்வு எழுத அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஏற்பாட்டை கல்வி அதிகாரி மாதவ் சல்கர் பாராட்டியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமான ஷீதல், 12-ம் வகுப்பு தேர்வு தனது எதிர்காலத்திற்கு முக்கியம் என்பதால் அதைத் தவறவிடவில்லை என கூறினார். கணவர் வேலைக்குச் செல்லும் நிலையில், வீட்டில் குழந்தையை கவனிக்க யாரும் இல்லாததால் குழந்தையுடன் வந்ததாக தெரிவித்தார். எதிர்காலத்தில் இத்தகைய மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!