"நீங்கதான் சார் என் கடவுள்!"... தேர்வு விடைத்தாளில் உருக்கமான படம் வரைந்த மாணவர்!
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கரைசேர வேண்டும் என லட்சக்கணக்கில் கொட்டி அழுது பெரிய கல்லூரிகளில் சேர்க்கின்றனர். ஆனால், சில மாணவர்களோ செல்போன், ரீல்ஸ், சோஷியல் மீடியா எனப் பொழுதைக் கழித்துவிட்டு, தேர்வு வரும்போது விழிபிதுங்கி நிற்கின்றனர். இப்படித் தேர்வைச் சரியாக எழுதாதவர்கள், எப்படியாவது 'பாஸ்' ஆகிவிட வேண்டும் என விடைத்தாளில் பணத்தை வைப்பதும், காதல் கதைகளை எழுதுவதும் வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில், தெலுங்கானா மாநில இன்டர்மீடியட் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியின்போது ஒரு வினோத சம்பவம் அதிகாரிகளை அதிர வைத்துள்ளது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் தெரியாத ஒரு மாணவர், "சார்... எனக்கு அம்மா, அப்பா இல்லை. நீங்கள்தான் எனக்கு எல்லாம். நான் படித்தது எதுவும் தேர்வில் வரவில்லை. எப்படியாவது என்னை பாஸ் பண்ணி விடுங்கள்" என உருக்கமாக எழுதியுள்ளார்.

வெறும் எழுத்துடன் மட்டும் நிறுத்தாமல், ஆசிரியரின் காலில் ஒரு மாணவர் விழுந்து வணங்குவது போன்ற படத்தையும் வரைந்து, அதற்கு அருகே 'சார்' மற்றும் 'நான்' எனப் பெயரிட்டு 'சென்டிமென்ட்' அஸ்திரத்தை வீசியுள்ளார். இந்த உருக்கமான (?) விடைத்தாள் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், "படிக்கும்போது படிக்காமல், இப்படி படம் வரைந்து பாஸ் பண்ண முடியுமா?" என வறுத்து எடுத்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
