மாணவர்கள் அசத்தல்!! கோடை காலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் உணவு!!

 
பறவைகளுக்கு தண்ணீர்

தர்மபுரி மாவட்டம், பாடி கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து பீனிக்ஸ் என்ற அமைப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினர். பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் இக்குழுவில் உள்ளனர். இந்த பீனிக்ஸ் அமைப்பின் மூலம் பூகானஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரி, அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துமனை உள்ளிட்ட இடங்களில், கடந்த 4 ஆண்டுகளாக சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர். இந்த குழுவில் இடம்பெற்றுள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் , தங்கள் பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் மரக்கன்றுகளை பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது போன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பறவைகளுக்கு தண்ணீர்
பூகானஹள்ளி ஏரியில் புங்கன் அத்தி, நாவல், பலா, வேம்பு அரசம் போன்ற பல வகை மரங்களும் வைக்கப்பட்டு தற்போது வளர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு வகையான பறவைகள் காலை, மாலை வேளைகளில் இந்த மரங்களில் வந்து அமர்ந்து  உண்டு வருகிறது.இந்நிலையில், தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் வழக்கம்போல் அங்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் இயற்கை சுற்றுச்சூழல் சேவை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, மரங்களை பாதுகாக்க பீனிக்ஸ் அமைப்பினர் களமிறங்கினர்.
தாங்கள் வைத்த மரக்கன்றுகளுக்கு கோடை காலங்களில் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால், ஏரியில் பாழடைந்த கிணற்றை பொதுமக்கள் பங்களிப்போடு தூர்வாரி சுத்தப்படுத்தினர். இதனை தொடர்ந்து அந்த கிணற்றிலிருந்து மோட்டார் வைத்து தண்ணீரை எடுத்து மரக்கன்றுகளுக்கு பாய்ச்சு வருகின்றனர்.

பறவைகளுக்கு தண்ணீர்
இதனிடையே, பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பீனிக்ஸ் அமைப்பினர், இங்கு வரும் பறவைகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய களத்தில் இறங்கினர். பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைப்பதற்காக வாட்டர் பாட்டில்களை இரண்டாக வெட்டி, அதை கம்பியால் மரத்தில் கட்டியுள்ளனர். இதன் ஒருபகுதியில் தானியங்கள் வைத்தும், மற்றொரு பகுதியில் தண்ணீரையும் ஊற்றியும் பறவைகளுக்கு வைக்கின்றனர். இதனால் இந்த பகுதிக்கு வருகின்ற பறவைகள் மரத்தில் அமரும் போது, இங்கே கட்டி வைக்கப்பட்டுள்ள தானியங்களை உணவாக எடுத்துக் கொண்டு, தண்ணீரையும் குடித்து விட்டுச் செல்கின்றது. தொடர்ந்து தினமும் மரக்கன்றுகளை பராமரித்து வரும் ஃபீனிக்ஸ் குழுவினர், பறவைகளுக்கு வைக்கப்பட்டுள்ள உணவு மற்றும் தண்ணீர் குறைவாக இருந்தால், அதனை மீண்டும் நிரப்பி விட்டு செல்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web