மாணவர்களே தயாரா? நாளை தவெக 3ம் கட்ட கல்வி விருது விழா!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து 3 ஆண்டாக தவெக கல்வி விருது விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் 3ம் ஆண்டு கல்வி விருது விழாவின் 3 ம் கட்ட விழா நாளை ஜூன் 13ம் தேடி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

முதல்கட்டமாக ஜூன் 30 ம் தேதி 88 தொகுதிகளைச் சேர்ந்த 676 மாணவ மாணவியர்களுக்கு கல்வி விருது வழங்கப்பட்டது. அப்போது தவெக தலைவர் விஜய், மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழுடன் 5000 ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார். 12ம் வகுப்பில் தமிழக அளவில் 599 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஓவியா அஞ்சலி மற்றும் 10ம் வகுப்பில் 499 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சோபியா ஆகியோருக்கு வைர கம்மல் பரிசளித்தார்.

ஜூன் 4ம் தேதி 2 ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ம் ஆண்டு கல்வி விருது விழாவில், 3 ம் கட்ட விழா நாளை ஜூன் 13ம் தேதி மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
