மாணவர்களே தயாரா இருங்க!! நாளை 10 மற்றும் 11 ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு!!

 
தேர்வு

தமிழகத்தில்  12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பிக்கும் தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில்  10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள்,  ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வினை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர். அதேபோல, பிளஸ் 1 தேர்வுகளும் இதே சமயத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.  சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியான நிலையில் மாநில பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.   10ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு எப்போது ரிசல்ட் வெளியிடப்படும் என கேள்வி எழுந்திருந்தது.

தேர்வு

முன்னதாக இந்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை மே 19ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதன்படி 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் எனவும், நாளை பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் . மாணவர்களின் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் அர்சு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web