பகீர்.. பட்டாகத்தி.. பாட்டில் வீச்சு.. கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்! 4 பேர் கைது!

 
student fight

சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள மாநில கல்லூரியில் முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வந்துள்ளது. இந்த நிலையில் இரு தரப்பு மாணவர்களும் மெரினா கடற்கரையில் மோதிக் கொண்டுள்ளனர். பட்டப்பகலில் கத்தி மற்றும் பாட்டில்களை வைத்து இருதரப்பினரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதில் 3 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது விளையாட்டாக செய்தது வினையாக முடிந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், சுனில் என்ற மாணவன் இறந்ததாக போட்டோவை மார்பிங் செய்து சக மாணவர்களே சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

student fight

இதை பார்த்த மாணவர்கள் சிலர் சுனிலை பார்த்து கேலி செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த சுனில், தன்னை அவமானப்படுத்திய சக மாணவர்களை பழிவாங்க திட்டம்போட்டுள்ளார். இதற்காக சுனில் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் 20 பேருடன், புகைப்படத்தை மார்பிங் செய்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளார்.

அதன்படி, நேற்று சுனில் நண்பர்களுடன் மெரினா கடற்கரையில் உள்ள நேரு சிலை பின்புறம் ஆயுதங்களுடன் தயாராக இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் எதிர்தரப்பு மாணவர்களுக்கு தெரியவந்ததும், அவர்களும் ஆயுதங்களுடன் காமராஜர் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு வந்தனர். அப்போது நேரு சிலை அருகே பதுங்கி இருந்த சுனில் மற்றும் நண்பர்கள் திடீரென ஆயுதங்களுடன் எதிர்தரப்பினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அப்போது இரு தரப்பு கும்பலும் கடுமையாக மோதிக்கொண்டனர்

student fight

இந்த மோதல் சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒருவரை ஒருவர் கடுமையாக ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதில் 3 கல்லூரி மாணவர்களின் மண்டை உடைந்து ரத்த கொட்டியது. இதுகுறித்து தகவல் அறிந்த மெரினா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இருந்தாலும் மோதலுக்கு காரணமான சுனில் மற்றும் தனுஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

8 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் நேற்று இருதரப்பு மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மெரினா கடற்கரையில் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தப்பியோடி தலைமறைவாக உள்ள மாணவர்களைத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web