ஆசிரியையின் அந்தரங்கப் புகைப்படங்களைக் காட்டி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவர்கள்!
தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் உதவித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட உறவின் காரணமாக எடுக்கப்பட்டிருந்த அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து, அதே பள்ளியில் ஆய்வு வகுப்பில் பயிற்சி பெற்று வந்தமாணவர்கள் சிலர் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் கனகராஜ் (43) மற்றும் அதே பள்ளியின் கணித ஆசிரியை ஹேமா (36) ஆகிய இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இருவரும் தனிமையில் உரையாடும் போது, ஒருவருக்கொருவர் அந்தரங்கப் புகைப்படங்களைப் பரிமாறிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதே பள்ளியில் பயிற்சி ஆசிரியர்களாக இருந்த பி.எட். மாணவர்கள், மனக்குன்னம் பகுதியைச் சேர்ந்த இனியவர்மன் (22) மற்றும் குறிச்சி பகுதியைச் சேர்ந்த கலைசாரதி (22) ஆகியோர் இந்த விவரங்களைத் தெரிந்து கொண்டனர்.

இந்த இருவரும் உதவித் தலைமை ஆசிரியர் கனகராஜின் செல்போனைத் திருடி, அதிலிருந்த ஆபாசப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கொடுக்கும்படி அவரை மிரட்டியுள்ளனர். திருடப்பட்ட செல்போன் குறித்து உதவித் தலைமை ஆசிரியர் கனகராஜ் கடந்த மாதம் 27ம் தேதி பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மிரட்டல் விடுத்த பயிற்சி ஆசிரியர்கள் கலைசாரதி மற்றும் இனியவர்மன் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து செல்போனைப் பறிமுதல் செய்த போலீசார், அதிலுள்ள அந்தரங்கப் புகைப்படங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்துப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேபி அவர்கள் நேற்று நேரடியாகப் பள்ளிக்குச் சென்று, உதவித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை ஆகிய இருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். அப்போது, அவர்களது செல்போனில் அந்தரங்கப் புகைப்படங்கள் பறிமாறப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதன் விளைவாக உதவித் தலைமை ஆசிரியர் கனகராஜ் மற்றும் கணித ஆசிரியை ஹேமா ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் (தற்காலிகப் பணி நீக்கம்) செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
