மாணவர்கள் உற்சாகம்!! CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

 
cuet

2023ல் கியூட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில்  விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை  தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  அதன்படி, விண்ணப்பதாரர்கள் மார்ச் 30ம் தேதி இரவு 9.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும்  பணம் செலுத்துவதற்கான  நடைமுறையை இரவு 11.50 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் க்யூட் தேர்வு விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 3 வரை திருத்தங்களைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான  http://nta.ac.in மற்றும் https://cuet.samarth.ac.in ஐ பார்வையிடலாம். 

cuet
மத்திய பல்கலைக்கழகங்களில் 2023ல் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வை அறிவித்தது. மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web