மாணவர்கள் உற்சாகம்!! கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

 
கல்லூரி மாணவிகள்

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகின.   அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கல்லூரி சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பல்வேறு தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை தொடங்கி விட்டன. இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கடந்த 8ம் தேதி முதல் தொடங்கப்பட்டது.  பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கை நடைமுறைகளும்  மே 5ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

பொறியியல் கல்லூரி


தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு  வருகின்றன. இதில் இளங்கலைப் படிப்புகளில் 1,73905 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19ம் தேதி வரை http://www.tngasa.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே 19 ம் தேதி கடைசியாக இருந்த நிலையில்  தற்போது விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவிகள்

 இதன்படி மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.அதன்பின், மாற்றுத்திறனாளிகள் உட்பட  சிறப்புப் பிரிவினருக்கான மாணவர்  சேர்க்கை மற்றும் கல்லூரி அளவிலான கவுன்சிலிங் மே 25ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web