மாணவர்கள் உற்சாகம்!! நாளை முதல் பள்ளிகள் அரை நாள் மட்டுமே!!

 
பள்ளிகள்

தமிழகத்தில் 12 வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தனியார் மற்றும் மெட்ரிக் , சிபிஎஸ்சி பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் மற்ற வகுப்புக்களுக்கும் ஆண்டுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் தெலுங்கானாவில் பள்ளிகள்  நாளை முதல் அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பள்ளிகள்

இந்தியா முழுவதும் தற்போது 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு 2022 – 2023 ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நன்மை கருதி பள்ளிகள் மார்ச் 15 முதல் அரை நாள் மட்டுமே செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இது குறித்து அம்மாநில பள்ளிக்கல்வி இயக்குனர்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  தெலங்கானாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை முதல் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே செயல்படும் .

பள்ளிகள்

அதே நேரத்தில் மாணவர்களுக்கு 12. 30 மணியளவில் வழக்கம் போல பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்படும். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 3 ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது.  பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் மட்டும் மாணவர்களுக்கு வகுப்புகள் பிற்பகல்  1 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிவடைந்த பிறகு ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு புதிய கல்வியாண்டு தொடங்கப்படும் என தெலங்கானா  கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web