மாணவர்கள் உற்சாகம்!! பிப்ரவரி 6ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. நடப்பாண்டில் தொடக்கம் முதலே பள்ளிகள், கல்லூரிகளில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்பட்டன. டிசம்பர் மாதத்தில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவாகிய மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

ஈடுசெய்யும் வகையில் மற்றொரு சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.  அரசு விடுமுறைகள் தவிர்த்து தமிழகத்தில்  உள்ளூர் கோவில் பண்டிகைகள்,சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் என முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை ஞான மாமேதை பீரப்பா ஆண்டு விழா  பிப்ரவரி 6ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கின்றது.தக்கலை செய்கு பீர்முஹம்மது ஹாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டுவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 6ம் தேதி கன்னியாகுமரி  மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 

உள்ளூர் விடுமுறை

இதனை முன்னிட்டு பிப்ரவரி 6 ம் தேதி கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச்  11 ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web