குஷியில் மாணவர்கள்... மார்ச் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை!
பிப்ரவரி மாதத்தில் பெரிய அளவில் விடுமுறை இல்லாததால் சோர்வடைந்திருந்த மாணவர்களுக்கு, மார்ச் மாதம் உற்சாகத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது. இந்த மாதத்தில் வார இறுதி விடுமுறைகளுடன் சேர்த்துச் சுப தினங்களுக்கான விடுமுறைகளும் வரிசை கட்டி வருகின்றன.
தமிழக அரசின் பொது விடுமுறைப் பட்டியலின்படி, மார்ச் மாதத்தில் கீழ்க்கண்ட நாட்களில் விடுமுறை அளிக்கப்பட உள்ளது:
மார்ச் 19ல் தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி), மார்ச் 21ல் ரம்லான் (ஈதுல் பித்ர்) என தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. மகாவீர் ஜெயந்தி மார்ச் 31, 2026 (செவ்வாய்க்கிழமை) - சமண மதத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு விடுமுறை.

மார்ச் மாதத்தில் வரும் 4 சனிக்கிழமைகள் மற்றும் 5 ஞாயிற்றுக்கிழமைகள் என மொத்தம் 9 வார இறுதி விடுமுறை நாட்கள் வருகின்றன. இதனுடன் அரசு விடுமுறை நாட்களையும் சேர்த்தால், மார்ச் மாதத்தில் மாணவர்களுக்குச் சுமார் 11 முதல் 12 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் ஒருபுறம் விடுமுறையை எதிர்நோக்கினாலும், மறுபுறம் பொதுத் தேர்வுகள் நெருங்கி வருகின்றன.

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மார்ச் 11 முதல் ஏப்ரல் 4 வரை. எனவே தேர்வு எழுதப் போகும் மாணவர்களைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு இந்த மார்ச் மாத விடுமுறை ஒரு வரப்பிரசாதமாக அமையும். பிப்ரவரி மாதத்தில் விடுமுறை கிடைக்காத ஏமாற்றம் இதன் மூலம் ஈடுகட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
