இரவு 10.30 வரை பள்ளி வகுப்பறையில் மாணவர்கள்... வைரல் வீடியோ!

 
china

சீனாவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இரவு 10 மணி வரை வகுப்பறைகளில் படிக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. சாங்ஷா நகரில் உள்ள இந்தப் பள்ளியில், ‘காகாவோ’ தேர்வுக்குத் தயாராக காலை 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் இடைவேளை குறைவாகவே ஓய்வு எடுக்கின்றனர்.

இந்த காணொலியைப் பகிர்ந்த ஆலன் ஃபூ, இரவில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் மாணவர்களை அழைத்துச் செல்ல காத்திருக்கும் பெற்றோரின் வாகனங்களால் ஏற்பட்டது என்றார். மாணவர்கள் காலை முதல் இரவு வரை தொடர்ந்து படிக்கிறார்கள் என்றும், சிலர் மதிய இடைவேளையில் பள்ளியிலேயே தூங்கி மீண்டும் படிப்பைத் தொடங்குகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காகாவோ தேர்வு சீனாவில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான ஒரே அளவுகோல். சீன இலக்கியம், கணிதம், வெளிநாட்டு மொழியுடன் கூடுதல் பாடங்களிலும் தேர்வு நடக்கிறது. இந்த கடும் பயிற்சி பாராட்டத்தக்கது என்றாலும், இதன் விலை என்ன என்ற கேள்வியும் எழுகிறது. வெற்றிக்காக சுதந்திரத்தை இழப்பது சரியா என்ற விவாதமும் வலுப்பெறுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!