இன்று தவெக சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு விழா!
May 30, 2025, 10:50 IST
தவெக சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தலைவர் விஜய் கல்வி விருது வழங்குகிறார்.

இது குறித்து முன்னதாக தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின.

இந்தப் பொதுத் தேர்வுகளில் தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்ட உள்ளார். அதன்படி மே 30ம் தேதி வெள்ளிக்கிழமை மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
