மாணவர்கள் அதிர்ச்சி!! நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் உயர்வு!!

 
நீட் தேர்வு

இந்தியாவில் மருத்துவ கல்வியை படிப்பதற்கு நீட் தேர்வுகள் எழுத வேண்டியது அவசியம். இதற்காக நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை மூலம்  நடத்தப்படும் இந்தத் தேர்வு ஆங்கிலம், தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. அதன்படி 2023ம் கல்வியாண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 7ம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத்  தேர்வு

இதற்கான விண்ணப்ப படிவங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது . இந்த விண்ணப்ப படிவங்களை அதிகாரப்பூர்வ இணையதளமான https://neet.nta.nic.in/  மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 7  என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஹால் டிக்கெட் மற்றும்  தேர்வு தொடர்பான மற்ற  தகவல்கள் பின்னர் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வு
இந்நிலையில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் விண்ணப்பக் கட்டணத்தை கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது குறித்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி பொதுப் பிரிவினருக்கு ரூ.1700, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.1,600 மற்றும் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.1,000 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்