கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் திடீர் மோதல்... 12 பேர் கைது!
சமீப காலங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்களிடையே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. ரயில் நிலையங்கள், பேருந்துகள் போன்ற பொதுஇடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் பட்டாக்கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் சென்னை பச்சயப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவரை கொடூரமாக கத்தியால் தாக்கியதில், மாணவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மாணவர்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் சுடலைமுத்து என்பவர் எதேச்சையாக பார்த்ததாக கூறப்படுகிறது. இதை தவறாக புரிந்து கொண்ட அதே கல்லூரியில் படிக்கும் மாணவியின் அண்ணன் இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினர் நேற்று கல்லூரிக்கு சென்றனர். அங்கு வளாகத்துக்குள் நின்று கொண்டிருந்த சுடலைமுத்துவை திடீரென தாக்கினர். இது மோதலாக மாறியது. காயம் அடைந்த மாணவர் சுடலைமுத்து, இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியின் உறவினர்கள் 4 பேர் மற்றும் கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் 4 பேர் என 8 பேரை கைது செய்தனர். மேலும், மாணவியின் அண்ணன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலைமுத்து உள்பட 4 பேரை கைது செய்தனர்.
கைதான 12 பேரில் 10 பேரை அம்பாசமுத்திரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 2 பேரை நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர். இச்சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
