தடுமாறும் பொதுமக்கள்!! 24 மணி நேரத்திற்கு இணையதள சேவைகள் முற்றிலும் முடக்கம்!!

 
அம்ரித்பால் சிங்

பஞ்சாபை தனிநாடாக பிரிக்க ஒரு கும்பல் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இந்த அமைப்பை சார்ந்தவர்கள் காலிஸ்தான்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போதே பஞ்சாப் பிரிவினையும் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட போதிலும், வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட சிலர் இந்த அமைப்பை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

அம்ரித்பால் சிங்

இது சம்பந்தமாக பிப்ரவரி 23ம் தேதி வாரிஸ் பஞ்சாட்டி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை கண்டித்து இந்த அமைப்பின் தலைவர் “அம்ரித்பால் சிங்” தலைமையில் கத்தி, அரிவாள் , கம்பு, வாள், வீச்சருவாவுடன் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டதால் நிலைமை கட்டுக்குள் இருந்து மீறுவதை உணர்ந்த காவல்துறையினர் குறிப்பிட்ட நபரை விடுதலை செய்தனர்.

காலிஸ்தான்

இந்நிலையில் இன்று மார்ச் 18ம் தேதி அம்ரித்பால் சிங்க் மற்றும் அவரது உதவியாளரை காவல்துறை கைது செய்துள்ளது. இதனால் ஏற்படும் பதட்டத்தை தணிக்க இணைய சேவை, வங்கி சேவைகள் , மொபைல் ரீசார்ஜ் சேவைகள், எஸ்.எம்.எஸ் சேவைகள்  முடக்கப்படும் என பஞ்சாப் உள்துறை தெரிவித்துள்ளது. சீக்கிய மத போதகரான அம்ரீத்சிங் பால் துபாயில் இருந்து திரும்பிய பின்னர்  சாலை விபத்தில் இறந்த நடிகரும், ஆர்வலருமான தீப் சித்துவால் நிறுவப்பட்ட ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.  இந்த சமயத்தில், காலிஸ்தான் இயக்க ஆதரவாளர் அம்ரித்பால் சிங்-ஐ கைது செய்ய பஞ்சாப் போலீசார் தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும், அம்ரித்பால் சிங்  கைது தொடர்பாக  காவல்துறையின் நடவடிக்கை குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web