சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல தயாராகும் 2 வது இந்தியர்!

 
சுபான்ஷு சுக்லா
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான ‘முதன்மை’ விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுபான்ஷு சுக்லா. இவர்  குரூப் கேப்டனும் இந்திய விமானப்படை (IAF) அதிகாரியும் ஆவார். 2025 மே மாதம் நாசாவின் ஆக்சியம் மிஷன் 4 குழுவினருடன் சர்வேதேச விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் கூற்றுப்படி, மே 2025 க்கு முன்பு ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் குழுவினர் விண்வெளி நிலையத்திற்கு புறப்பட மாட்டார்கள். மேலும், குழுவினர் 14 நாட்கள் சுற்றுப்பாதை ஆய்வகத்தில் தங்கியிருப்பார்கள் எனவும் அது கூறியது.

இதன் மூலம் 1984-க்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவின் 2வது விண்வெளி வீரர் இவராக அறியப்படுகிறார்.  ராகேஷ் ஷர்மாவுக்கு பிறகு விண்வெளி செல்லும் 2வது இந்தியரான சுக்லா, இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை எட்ட உள்ளார். இவரது பயணம் இந்தியாவின் விண்வெளி திறனை உலகிற்கு வெளிப்படுத்தும்.
இந்தப் பயணம் NASA மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ISRO ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக கருதப்படுகிறது.  SpaceX நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் புளோரிடாவிலிருந்து புறப்படும் இந்தப் பயணத்தில் சுபான்ஷு சுக்லா விண்கலத்தின் பைலட்டாக பணியாற்றுவார். 

இஸ்ரோ
சுபான்ஷு சுக்லா 1985 ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் பிறந்தவர்.  இவர் தனது பள்ளிப்படிப்பை லக்னோவில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில் முடித்தார். 1998 ல்  நடைபெற்ற கார்கில் போரின் போது, இந்திய ஆயுதப்படைகளில் சேர வேண்டும் என்ற உத்வேகம் அவருக்கு ஏற்பட்டது.
கேப்டன் சுபான்ஷு சுக்லா இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஒரு அனுபவமிக்க சோதனை விமானி.  இவர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல தயாராகும் இரண்டாவது இந்தியராக அறியப்படுகிறார்.  

இஸ்ரோ
அதனைத் தொடர்ந்து, தனது குடும்பத்தினருக்கு தெரிவிக்காமலேயே தேசிய பாதுகாப்பு அகாடமியின்  தேர்வை எழுதி வெற்றி பெற்றார். 2006ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய விமானப்படையில் போர் விமானப் பிரிவில்  பணியில் சேர்ந்தார்.
சுக்லா ஒரு திறமையான விமானியாக, Sukhoi-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk, Dornier மற்றும் AN-32 போன்ற பல்வேறு விமானங்களை இயக்கி சுமார் 2,000 மணி நேரம் பறந்த அனுபவம் பெற்றவர். இவரது இந்த அனுபவமும், திறமையும் அவரை சர்வதேச விண்வெளி பயணத்திற்கு தகுதியானவராக மாற்றியுள்ளது. ஆக்ஸியம்-4: SpaceX-ன் டிராகன் விண்கலத்தில் ISS-க்கு சென்று 14 நாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web