“மகனை கொலை செய்ய சுபாரி” அதிர்ச்சியூட்டிய தாயின் கொடூர சதி !
ஆந்திரப் பிரதேசத்தில் 22 வயது எம்.பி.ஏ மாணவரான மகனை கொலை செய்ய சொந்தத் தாய் ரூ.6 லட்சம் சுபாரி கொடுத்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைச் சதியில் நேரடியாக ஈடுபட்டதாக 50 வயதான ஷியாமளா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீஸ் தகவலின்படி, ஷியாமளாவின் மகன் ஜெயபிரகாஷ் ரெட்டி சமீபகாலமாக அதிகமாக மது அருந்தி வந்துள்ளார். இதனால் தாயிடம் அடிக்கடி பணம் கோரி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிரமமடைந்த ஷியாமலா, குடும்ப நண்பரான மகேஷை அணுகி மகனைத் தீர்த்துக்கட்ட ஒப்பந்தம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மகேஷுக்கு முதல் தவணையாக ரூ.50,000 வழங்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சதியின் பின்னணியில், நவம்பர் 7 அன்று மும்பை–சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குல்லப்பள்ளி பகுதியில் உள்ள மதுக்கடைக்கு அருகே ஜெயபிரகாஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆரம்ப விசாரணையின் போது தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் குழுவும் இணைந்து செயல்பட்டனர்.
அப்போது மகேஷின் மொபைலில் இருந்து ஷியாமளாவுக்கு செய்யப்பட்ட ஒரு முக்கிய தொலைபேசி அழைப்பு, முழு சதியையும் உடைத்ததாக இன்ஸ்பெக்டர் கோபால் ரெட்டி கூறியுள்ளார்.இந்தக் கொலையில் மகேஷ் மேலும் ஆறு பேரைச் சேர்த்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. தற்போது ஷியாமளா, மகேஷ் உள்பட மொத்தம் எட்டு பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
