கலெக்டரின் மன்னிப்பு கடிதத்தை ஏற்க முடியாது’ உயிரிழந்த சப்-கலெக்டர் மனைவி மஞ்சுஷா ஆவேசம்!

 
மஞ்சுஷா
 

கலெக்டரின் மன்னிப்புக் கடிதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. தாமதமான இடமாற்றம், கடுமையான கட்டுப்பாடுகள், அதுவரையில் மறுக்கப்பட்டு வந்த விடுப்பு போன்ற மன அழுத்தங்களுக்கு கலெக்டர் பதில் கூறி ஆக வேண்டும்” என்று நவீன் மனைவி மஞ்சுஷா ஆவேசமாக தனது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மஞ்சுஷா இப்படித் தொடர்ந்து கலெக்டருக்கு எதிரான சம்பவங்களை விவரித்துக் கொண்டிருந்த போது, கலெக்டர் தலைகவிழ்ந்த நிலையில் அமைதியாக அந்த இடத்தில் இருந்தார். 

கேரள மாநிலம்  பத்தனம்திட்டா மாவட்டம் கண்ணூர் உதவி கலெக்டர் நவீன் தற்கொலைச் செய்துக் கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், பதவி உயர்வு, இடமாறுதல் வழங்கப்பட்ட நிலையில், ஏன் தற்கொலைச் செய்துக் கொண்டார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. பணியிட மாறுதல் குறித்து நடந்த பிரிவுபசார விழாவில் திவ்யா, அழையா விருந்தாளியாக கலந்து கொண்டு அத்தனை பார்வையாளர்கள் முன்னிலையில் நவீன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறி தரம் தாழ்ந்த வகையில் பேசியதாக கூறப்படுகிறது. 

மஞ்சுஷா

இந்நிலையில், நவீன் தற்கொலை தொடர்பாக கண்ணூர் கலெக்டருக்கு எதிராக ஏ.டி.எம் நவீன் பாபுவின் உறவினர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலெக்டர் அரசியல் தலைவர்களுடன் உறவில் 'இணக்கமாக' இருந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர். 

இடமாறுதல் உத்தரவு வந்த பின்னரும் நவீனின் பணியில் இருந்து விடுவிப்பது மிகவும் தாமதமான நிலையில், ஆட்சியர் நவீனுக்கு விடுப்பும் வழங்கவில்லை. இந்த தகவலை ஒருமுறை நவீன் தனது குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்துள்ளார். திவ்யா, பிரியாவிடை விழாவிற்கு வாய்மொழியாக கூட அழைக்கப்படவில்லை. விழாவிற்குள் திவ்யாவின் பிரவேசம் எதிர்பாராதது என்றனர். அவர் அந்த விழாவில் அழைக்கப்படாமல் வந்து ஆவேசமாக பேச வேண்டிய அவசியமில்லை. 

மஞ்சுஷா

கண்ணூர் மாவட்ட வருவாய் துறை ஊழியர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். கலெக்டரின் வாக்குமூலத்தை ஏற்க நாங்கள் தயாராக இல்லை என்றும், கலெக்டரின் தலைமையில் நவீன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குடும்பத்தினர் கடுமையாக தங்கள் வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த பிளவு தான் நவீனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதில்லை என கலெக்டரை முடிவு செய்ததாக குடும்பத்தினர் கருதுகின்றனர். 

கடந்த வியாழன் அன்று, போலீசார் நவீனின் மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் சகோதரர் ஆகியோரின் வாக்குமூலத்தை 5 மணிநேரம் பதிவு செய்தனர். மரணத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகள் குறித்து மேலும் விசாரணை நடத்த நில வருவாய் இணை ஆணையர் கீதா ஐஏஎஸ் பணிக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணை பொறுப்பில் இருந்து கண்ணூர் கலெக்டர் மாற்றப்பட்டுள்ளார்.  இதற்கு முன்னதாக திவ்யாவுக்கு சாதகமாக கலெக்டர் முதற்கட்ட அறிக்கை கொடுத்திருந்தார். இருப்பினும், குடும்பத்தினரிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, மேலதிக விசாரணையின் பொறுப்பு வேறு அதிகாரிக்கு மாற்றப்பட்டது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!