சுபமுகூர்த்த தினம்... நேற்று ஒரே நாளில் பத்திரப்பதிவு துறையில் ரூ.192 கோடி வருமானம்!

 
பத்திரப்பதிவு

சுபமுகூர்த்த தினமான நேற்று பத்திரப்பதிவு மூலம் ஒரே நாளில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.192 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று கார்த்திகை மாத கடைசி வளர்ப்பிறை சுபமுகூர்த்த தினத்தையொட்டி, ஒரே நாளில் ரூ.192 கோடி பத்திரப்பதிவு துறைக்கு வருமானம் வந்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பத்திரப்பதிவு

அரசு துறைகளில், பிற துறைகளைப் போல் அல்லாமல், பத்திரப்பதிவு துறை, முகூர்த்த நாட்களில் அதிக நேரம் பொதுமக்களின் வசதிக்காக இயங்கி வருகிறது. குறிப்பாக சுபமுகூர்த்த நாட்கள், அமாவாசை நாட்கள், வளர்பிறை நாட்களில் கூடுதல் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வகையில் நேற்று, மார்கழி மாதத்திற்கு முன்பான வளர்பிறை சுபமுகூர்த்த தினம் என்பதால், சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவண பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருச்சி, மதுரை, கோவை, திருப்பத்தூர், தென்காசி உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கூடுதலாக பத்திரப்பதிவு நடைப்பெற்றது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”பதிவுத்துறையில் சார் பதிவகங்களில் 14.12.2023 அன்று ஆவணங்களின் பதிவு அதிகமாக எதிர்பார்க்கப்பட்டதால் கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்பட்டன. நேற்று பதிவு செய்யப்பட்ட 22,060 ஆவணங்களின் மூலம் அரசுக்கு வருவாயாக ரூ.192 கோடி வரப்பெற்றுள்ளது.

இந்த நிதி ஆண்டில் பதிவுத்துறையில் ஒரே நாளில் இதுவரை வரப்பெற்ற வருவாயில் நேற்றைய தினம் பெறப்பட்ட வருவாயே மிக அதிகமானதாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web