7வது முறையாக சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி பயணம் மீண்டும் ஒத்தி வைப்பு!

 
சுபான்ஷு சுக்லா
 


இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 7 வது முறையாக அவரது பயணத்திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின், ஆக்சியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

சுபான்ஷு சுக்லா

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி  வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்ய தயாராகி வருகின்றனர்.  

சுபான்ஷு

இதற்காக, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் ஜூன் 22ம் தேதி விண்வெளிக்கு புறப்படுவதாக இருந்தனர். ஆனால், திடீரென இந்த பயண திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது