நாளை சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம்!
மனிதர்களை விண்வெளி பயணத்திற்கு அனுப்பும் இந்தியாவின் 'ககன்யான்' திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்டவர் சுபான்ஷு சுக்லா இவருடன் 4 பேர் கொண்ட குழு, நாளை ஜூன் 25ம் தேதி விண்வெளிக்கு செல்ல உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான 'ஆக்ஸிம் ஸ்பேஸ்' நிறுவனத்தின் 'ஆக்ஸிம்-4' திட்டத்தின் கீழ் இந்த விண்வெளி பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. சுபான்ஷு சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோரும் விண்வெளிக்குச் செல்கின்றனர்.

முன்னதாக, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 'ஸ்பேக்ஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'ஃபால்கான் 9' ராக்கெட் மூலம், அவர்கள் பயணிக்க இருந்தனர். திட்டமிடப்பட்ட ஏவுகணை பாதையில் நிலவிய மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு, சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷியப் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் ஏவுகலன் ஏவுதல் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 19ம் தேதி அந்தப் பயணம் திட்டமிடப்பட்ட நிலையில், 6-வது முறையாகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இவர்கள் நாளை விண்வெளிக்குச் செல்லவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இவர்கள் செல்லும் விண்கலம் நாளை அதிகாலை 2:31 மணிக்கு இந்திய நேரப்படி பிற்பகல் 12:10 மணிக்கு ஏவப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
