உதவி ஆய்வாளர் காரில் மோதிக் கொலை… திமுக நிர்வாகியின் மகன் உட்பட 3 பேர் கைது!

 
ஓசூர்

ஓசூர் ராயக்கோட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே அன்னை அரவிந்தர் நகரை சேர்ந்தவர் சிவமூர்த்தி (54). தொழிலாளர் நலத்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் முன்பு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது காரில் வந்த இளைஞர்கள் வாகனங்களை அகற்றுமாறு தொடர்ந்து ஒலி எழுப்பினர்.

ஆம்புலன்ஸ்

இதையடுத்து சிவமூர்த்தி, அவரது மகன் கிருபாகரன், மருமகள் அம்சவேணி மற்றும் 6 மாத குழந்தை வெளியே வந்தனர். அப்போது காரில் வந்த இளைஞர்களுடன் தகராறு ஏற்பட்டது. திடீரென காரை வேகமாக ஓட்டிய இளைஞர்கள் நால்வர் மீதும் மோதினர். பலத்த காயமடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே சிவமூர்த்தி உயிரிழந்தார்.

டெல்லி போலீஸ்

இது குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசனின் மகன் ஆதித்யா (24), அவரது நண்பர்கள் ரித்திக் குமார் (19), ஹரீஸ் (19) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!