எஸ்.ஐ.யின் மனைவி சடலமாக மீட்பு - கள்ளத்தொடர்பு, வரதட்சணைக் குற்றச்சாட்டு!

 
கொலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் டவுன் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ.) அருண்குமாரின் மனைவி இளவரசி (26), தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இளவரசியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில், கணவர் மற்றும் அவரதுக் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாத்தூர் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வந்த எஸ்.ஐ. அருண்குமார், சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டியும் திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு அறையில் இளவரசி தூக்கில் பிணமாகத் தொங்கினார். அப்போது, மற்றொரு அறையில் குழந்தை செல்போனுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கொலை

போலீசார் நடத்திய விசாரணையில், இளவரசி தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், "நான் செல்கிறேன். குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்... நன்றாக படிக்க வையுங்கள்" என்று பதிவிட்டிருந்தது தெரிய வந்தது. இளவரசியின் மரணம் குறித்துத் தகவல் அறிந்த உறவினர்கள், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இளவரசியைக் கொன்று தூக்கிலிட்டு நாடகமாடி இருப்பதாகச் சந்தேகம் எழுவதாகவும், இளவரசி சித்ரவதை செய்யப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், வழக்குப் பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமாரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மறியல் குறித்துத் தகவல் அறிந்து வந்த விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ் குமார் தலைமையிலானப் போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பள்ளி மானவி தற்கொலை

இளவரசியின் தந்தை கருப்பசாமி அளித்த புகாரில், "வேறு பெண்ணுடன் அருண்குமாருக்குக் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், புதிய கார் வாங்குவதற்குப் பெற்றோரிடம் பணம் வாங்கி வரச் சொல்லி இளவரசிக்குத் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் இளவரசி கொலை செய்யப்பட்டு இருக்கலாம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், சாத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இளவரசியின் சாவுக்கான காரணம் பற்றித் தெளிவாகக் கூற முடியும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!