எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க மேலும் 3 நாள் கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் எஸ்ஐஆர் (SIR) படிவங்களை அளிப்பதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசு 2வது முறையாக கால அவகாசத்தை வழங்கியுள்ளது. புதிய காலக்கெடு டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கால நீட்டிப்பு செய்யப்பட்டிருந்ததால் மக்கள் பெருமளவில் படிவம் சமர்ப்பிக்க வரிசையில் நின்றனர். இதனால் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க, மேலும் மூன்று நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிரமமின்றி படிவங்களை சமர்ப்பிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.மக்கள் பயன்பெறும் வகையில் இந்த நீட்டிப்பு உதவும் எனவும், குறிப்பிட்ட தேதிக்குள் படிவங்களை சமர்ப்பிக்கும்படியும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
