ரூ.1 லட்சம் வரை மானியம்... 'பிங்க்' நிற ஆட்டோ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

 
 'பிங்க்' நிற ஆட்டோ
இன்று சர்வதேச மகளிர் நாளையொட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் 'உலக மகளிர் நாள் விழா' நிகழ்ச்சியில் 'பிங்க்' நிற ஆட்டோ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இன்று சர்வதேச மகளிர் நாளையொட்டி தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

பிங்க் ஆட்டோ

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் உலக மகளிர் தின விழா - 2025ல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 100 மகளிருக்கு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் சுய உதவிக் குழு மகளிருக்கு 50 நீல நிற மின் ஆட்டோக்கள், தொழிலாளர் நலத் துறை சார்பில் மகளிருக்கு 100 மஞ்சல் நிற ஆட்டோக்கள், உட்பட மகளிருக்கு 250 ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிங்க் ஆட்டோ

இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1 லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?