சென்னையை மூடிய பனி… புறநகர் ரயில்கள் தடுமாற்றம்!

 
pani
 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. காலை 8 மணி வரை நீடிக்கும் இந்த பனியால் சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பார்வைத் தூரம் குறைந்ததால் போக்குவரத்தும் மெதுவாக நகர்ந்தது.

இந்த நிலையில், இன்றும் வழக்கத்தை விட அதிகமாக பனிமூட்டம் காணப்பட்டதால் புறநகர் மின்சார ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது. திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

இதனால், காலை நேரத்தில் வேலைக்கு செல்லும் அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். “பனி போகும் வரை பயணம் சோதனை தான்” என்று பயணிகள் புலம்பிய நிலையில், பனிமூட்டம் குறையும் வரை தாமதம் தொடரும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!