அடுத்தடுத்து பரபரப்பு... ஐதராபாத் வந்த 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த இரண்டு சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மிரட்டல் ஒரு புரளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஐதராபாத் விமான நிலையத்திற்குக் கிடைத்த மின்னஞ்சல் ஒன்றில், இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் வந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திலும், குவைத்தில் இருந்து ஐதராபாத் வந்துகொண்டிருந்த குவைத் ஏர்வேஸ் விமானத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் உடனடியாக ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

அதேசமயம், ஐதராபாத் நோக்கி வந்த குவைத் ஏர்வேஸ் விமானம் நடுவானிலேயே குவைத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர் நடத்தப்பட்டத் தீவிர விசாரணையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் தகவல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த இரண்டு விமானங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
