அடுத்தடுத்து அதிர்ச்சி!! நியூசிலாந்தில் 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துடன் சுனாமி எச்சரிக்கை!!

 
நிலநடுக்கம்

பிப்ரவரி 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. 50000க்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தால் பலியாகினர். இன்னும் மீட்பு பணிகள் முழுவதுமாக நிறைவடையவில்லை. உலக நாடுகள் அனைத்தும்  இடிபாடுகளை அகற்றவும், மீட்பு பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அடுத்தடுத்து சுற்றியுள்ள நாடுகள் அனைத்திலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அங்கு வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று மார்ச் 16 ம் தேதி வியாழக்கிழமை  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது  . மேலும் இந்த பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

நீ…..ண்ட நிலநடுக்கம்! நாசா அதிர்ச்சி தகவல்!
நியூசிலாந்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள்  ஏற்படுகின்றன. உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு இவைகளின் எல்லையில் அமைந்திருப்பதால் அடிக்கடி  நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது.

சுனாமி

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக கண்டறியப்பட்டு உள்ளது.  மக்கள் வசிக்காத இந்த தீவுகளுக்கு நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web