திடீர் அலர்ஜி.. பரோட்டா சாப்பிட்ட 11ம் வகுப்பு மாணவி மரணம்!

 
மரியா

மக்களே... கூடுமானவரை ஹோட்டல் உணவுகளை தவிர்த்து விடுங்க. மக்களின் ஆரோக்கியத்தின் மீதும் உணவகங்கள் கவலைப்பட்டதெல்லாம் மலையேறி போச்சு. பணம் சம்பாதிக்கும் ஆசையில், எவன் ஆரோக்கியம் எப்படி போனா நமக்கென்ன என்கிற மனநிலையில் தான் பெரும்பாலும்.. ஆமாம்.. பெரும்பாலும் இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் உணவகங்கள் இயங்கி வருகின்றன. கரப்பான்பூச்சிகள் மிதக்குகிற சிக்கன் குழம்பு துவங்கி, எலி தலை  மிதக்குகிற மட்டன் சால்னா வரையில் இங்கே பிரியாணியில் புழுக்கள் நெளியும்... நான்கு நாட்களுக்கு  முன்பு வாங்கிய சிக்கனை வினிகரில் நனைத்து, சூடுப்படுத்தி நம் பணத்தையும் வாங்கிக் கொண்டு, நம் வயிற்றையும் குப்பைத்தொட்டியாக மாற்றுவார்கள். பல சமயங்களில் இவை உயிருக்கே உலை வைக்கின்றன. ஷவர்மாக்களால் அடுத்தடுத்து பலர் உயிரைக் காவு வாங்கிய கேரள உணவகங்கள் இப்போது பரோட்டாவை வைத்து இளம்பெண் ஒருவரின் உயிரை வாங்கியிருக்கிறது.

கேரளாவில், பதினொராம் வகுப்பு பயின்று வந்த மாணவி நயன் மரியா, பரோட்டா சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரை இழந்திருக்கிறார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாழத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் சிஜு கேப்ரியல். 16 வயதாகும் இவரது மகள் நயன் மரியா, அதே பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், நயன் மரியா, வீட்டின் அருகே இருந்த ஹோட்டல் ஒன்றிலிருந்து இரவு நேரத்தில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். பரோட்டா சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களிலேயே நயன் மரியனின் உடலில் எதிர்பாராத சில அலர்ஜி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. 

உடனே பெற்றோர் பதறியபடி, மரியனை இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் மரியனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் பின்னர், வெண்டிலேட்டர் வைக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். 

Parotta

மைதா மற்றும் கோதுமை பொருட்களைச் சாப்பிடும் போது நயனின் அவரது உடலில் ஏற்படும் அலர்ஜி சற்று குறைந்துள்ளது. இதனால் நயன் மரியா கடந்த சில காலமாக அதிகப் படியான மைதாவால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளார்.

மரியா

மருத்துவர்கள் அனைவருமே மைதாவில் இருந்து செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்றே கூறி வருகிறார்கள். மைதா மோசமானது என்று சொல்வது எளிது. ஆனால் மைதாவில் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. மேலும் மைதாவில் இருந்து செய்யப்படும் உணவுகள் சுவையாக இருப்பதால், அதை முற்றிலுமாக சாப்பிடாமல் இருப்பது கடினமாகவே இருக்கிறது. எனவே, முற்றிலும் மைதாவை கைவிட முடியவில்லை என்றாலும் முடிந்தவரைக் குறைக்கப் பாருங்கள். உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் அதிகம் எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web