அரிவாளால் காவலரை சரமாரியாக வெட்டிய வியாபாரி !! பகீர் பிண்ணனி!!

 
துர்கா

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஜில்லா பரிசத் சென்டரில் வெங்கட துர்கா பிரசாத் என்பவர் வாகனத்தில் வைத்து இளநீர் விற்பனை செய்து வந்துள்ளார். அவர் சில காலமாகவே அதே இடத்தில் வாகனத்தை நிறுத்தி இளநீர் விற்பனை செய்துள்ளார். தற்போது கோடை காலம் தொடங்கியதால் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது. வழக்கம்போல் நேற்றும் வெங்கட துர்கா பிரசாத் இளநீர் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மோட்டார் வாகன துணை ஆய்வாளர் சின்ன ராவ், இளநீர் விற்பனை செய்வதற்காக வெங்கட துர்கா பிரசாத் பயன்படுத்தும் சிறிய ரக சரக்கு வாகனத்தின் ஆவணங்களை கேட்டார்.

துர்கா

அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொண்டு கைக்கலப்பில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த வெங்கட துர்கா பிரசாத், திடீரென்று இளநீர் வெட்டுவதற்காக வைத்திருந்த அரிவாளை எடுத்து சின்னாராவை வெட்டினார். இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த மோட்டார் வாகன துணை ஆய்வாளர் சின்னராவை மீண்டும் மீண்டும் வெங்கட துர்கா பிரசாத் வெட்டினார்.

துர்கா

இதனைபார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அங்குவந்த போலீசார், படுகாயம் அடைந்த மோட்டார் வாகன துணை ஆய்வாளரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை முயற்சியில் ஈடுபட்ட வெங்கட துர்கா பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web