தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண் வேட்பாளர் திடீர் மரணம்... பெரும் சோகம்!
வடக்கு கேரளத்தில் நாளை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக திருவனந்தபுரம் முதல் எர்ணாகுளம் வரை உள்ள ஏழு மாவட்டங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மலப்புரம் மாவட்டம் மூத்தேடம் கிராம பஞ்சாயத்தில் உள்ள பயிம்படம் 7வது வார்டில் போட்டியிட்ட வட்டத் ஹசீனா நேற்று திடீரென உயிரிழந்தார். அங்கன்வாடி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஹசீனா, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வீடு வீடாக சென்று தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். மாலை வீடு திரும்பிய போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, நெஞ்சுவலி காரணமாக மயங்கி விழுந்த அவரை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தேர்தலுக்கு முன்னதாக பெண் வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் மலப்புரம் மாவட்டத்தில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் மலப்புரம் மாவட்டமும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
