அதிவேகமாக வந்த லாரி மீது மோதிய பைக் !! 2 இளைஞர்கள் பலி!! வெளிநாடு செல்ல இருந்த நிலையில் சோகம்!!

 
சின்ராஜ்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சின்ராஜ். அதே சமத்துவபுரத்தைச் சேரந்த கார்த்திக், சின்ராஜ் இருவரும் நண்பர்கள் ஆவர்.  இந்த நிலையில் இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை - மதுரை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பட்டணம் என்ற இடத்தின் அருகே சென்றபோது திருப்பத்தூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி அதிவேகமாக வந்த லாரி ஒன்று திடீரென இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவர் மீதும் லாரி ஏறி இறங்கியது.

சின்ராஜ்

இதனால் இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உறவினர்களும் அங்கு திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமயம் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சின்ராஜ்

இதையடுத்து விபத்து ஏற்பட்ட பிறகு தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் உயிரிழந்த சின்ராஜ் என்பவர் இன்று சிங்கப்பூருக்கு செல்ல இருந்தார் என்றும் கூறப்படுகிறது. வெளிநாடு செல்ல இருந்தவர் அதற்கு முந்தைய நாளில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

 
 

From around the web