பரபரப்பு.. உதயம் திரையரங்கின் முன்னாள் உரிமையாளர் கைது !!

 
உதயம் தியேட்டர்

சினிமா பைனான்சியர் போத்ராவிடம், ராஜீவ் காந்தி அறக்கட்டளை மூலமாக உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளராக இருந்த மணி மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகளான முன்னாள் காங்கிரஸ் எம்.பி இரா அன்பரசு மற்றும் அவரது மனைவி ஆகியோர் ரூ.35 லட்சம் கடனாக வாங்கினார். பின்னர் கடனாக கொடுத்த பணத்தை போத்ரா கேட்டுள்ளார். 

அவர் கேட்டதும் மணி உடனடியாக பணத்திற்காக செக் கொடுத்துள்ளார். வங்கிக்கு சென்று போத்ரா செக் போட்ட நிலையில், வங்கியில் பணம் இல்லாமல் செக் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போத்ரா, மணியிடம் கேட்டுள்ளார். ஆனால் பணம் குறித்து எந்த பதிலும் முறையாக வரவில்லை. 

உதயம் தியேட்டர்

இதையடுத்து போத்ரா கடந்த 2015ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், செக் மோசடி செய்ததாக சம்பந்தப்பட்ட உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளராக இருந்த மணிக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால் நீதிமன்ற தீர்ப்புப்படி மணி கைது செய்யப்படவில்லை. 

உதயம் தியேட்டர்

அதேநேரம் இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.பி இரா. அன்பரசு மற்றும் அவரது மனைவி காலமானர். அதேபோல் சினிமா பைனான்சியர் போத்ரா உயிரிழந்துவிட்டார். அதைதொடர்ந்து போத்ரா மகன் இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதைதொடர்ந்து உயர் நீதிமன்றம் செக் மோசடி வழக்கில் தொடர்புடைய மணியை கைது செய்ய உத்தரவிட்டது. தொடர்ந்து, உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் மணியை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web