மருந்து ஆலையில் திடீர் வெடிவிபத்து... 14 பேர் காயம்!

 
வெடி விபத்து
 


 
தெலங்கானா மாநிலத்தில்  சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் இன்று காலை  பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 14 பேர் படுகாயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

ஆம்புலன்ஸ்

சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தயாரிக்கும் ஆலையில் பணியாளர்கள் வழக்கம்போல், பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்குத் தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

உத்தரபிரதேச போலீஸ்

படுகாயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக போலீஸ் அதிகாரி  தெரிவித்துள்ளார்.  மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாகவும், காயமடைந்தவர்களின் நிலை உடனடியாகத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். இந்த வெடி விபத்து குறித்து போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது